X

ஆசியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது

உலக அளவில் ஒரு வாரத்தில் 45 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியவேன் கெர்கோவ் கூறும்போது, “ உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் ஒரு மந்த நிலையை அடைந்துள்ளோம். அதே நேரத்தில் வாரத்துக்கு 44 லட்சம், 45 லட்சம் அளவுக்கு பாதிப்பு உள்ளது” என தெரிவித்தார்.

இதனால் நாம் மன நிறைவு அடைந்து விட முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ நாம் கொரோனா பெருந்தொற்று நோயின் நடுவில் இருக்கிறோம். இது முடிவுக்கு வந்து விட வேண்டும் என்று விரும்புகிறோம். பலரும் கொரோனா முடிவுக்கு வந்து விட்டதாக கருதி நடந்து கொள்கிறார்கள். ஆனால் கொரோனா முடிவுக்கு வந்து விட வில்லை” என தெரிவித்தார்.

வட மற்றும் தென் அமெரிக்காவில் தொற்று பரவல், இறப்பு அதிகமாக உள்ளது; ஐரோப்பாவில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்தாலும், இறப்பு அதிகமாக இருக்கிறது; ஆசியாவில் தொற்று பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.