X

ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க ஆசைப்படும் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இதையடுத்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் பற்றி அவர் கூறியதாவது, பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை, என்னுடைய இயக்குநர் நெல்சன் எனக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். நான் அதை முயற்சி செய்ய விரும்புகிறேன். விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர், அது எனக்குள்ளும் எதிரொலிக்கிறது” இவ்வாறு பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.