டி.டி.வி.தினகரன் மீதான அதிருப்தி காரணமாக அ.ம.மு.க.வில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகழேந்தி விலகினார். பின்னர் அவர் சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அ.தி.மு.க.வில் இணைவேன் என்று அவர் கூறினார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு புகழேந்தி நேற்று வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தார்.