X

அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்த தமிழ் ராக்கர்ஸ்

புதிய தமிழ்ப் படங்கள் தியேட்டரில் வெளியாகும் அன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை மறுநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம் இன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆகிவிட்டது. இதனால் ‘அவெஞ்சர்ஸ்’ படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.