X

அழித்து விடுவேன் என்று லலித் மோடி மிரட்டினார் – இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வீரரான பிரவீன் குமார், இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின் அறிமுகம் செய்யப்பட்டவர். 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை டோனியின் கேப்டன்சியில் ஆடிய வீரர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக கூறி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி வீரர்களின் மதுப் பழக்கம், ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பாதது, வீரர்கள் நட்புடன் பழகவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இந்நிலையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை லலித் மோடி அழித்து விடுவேன் என மிரட்டியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் ஆர்.சி.பி. அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் பெங்களூர் எனது இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றும் உணவு எனக்கு பிடிக்கவில்லை. டெல்லி மீரட்டுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருந்து எனது வீட்டுக்கு செல்ல சுலபமாக இருக்கும்.

ஆனாலும் ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாங்க. அது ஒப்பந்தம் என்று தெரியவில்லை. நான் பெங்களூரு அணிக்கு விளையாட விரும்பவில்லை டெல்லிக்காக விளையாட விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து மிரட்டினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என கூறினார். விரும்புகிறேன் என்று சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து மிரட்டினார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விடுவேன் என கூறினார்.

இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

Tags: tamil sports