வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 125 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தத இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்தது.