அறிமுக நடிகரை நாயகனாக வைத்து தனுஷ் இயக்கும் புதிய படம் – அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்று மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “தனுஷ் மூன்றாவதாக படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அவரின் சொந்தகாரர் மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் நான் தான் இசையமைக்கவுள்ளேன். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்” என கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema