அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் – நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மரியாதை

பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை கோட்பாடுகளான கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்ற வார்த்தைகளை முன்மொழிந்த அண்ணா உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அத்தகைய பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தகக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news