Tamilசெய்திகள்

அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அதிமுக அரசு தான் கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும். அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால், தமிழகத்தில் கொரோனா பரவியது.

கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும். இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர், ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *