Tamilசினிமா

அர்ஜூன் தாஸுக்கு ஜோடியான அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்திலும் நடித்தார். தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதிதி நடிக்கும் அடுத்தப் படத்தில் தனெக்கென குரல் பாணியிலும் நடிப்பிலும் அசத்தும் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் இசை நிறைந்த காதல் கதை பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசையை பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஹிருதயம் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் `ரசவாதி` திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.