X

அர்ஜூன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இணைந்து ‘போர்’ என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கு இப்படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘ரசவாதி’ என்று தலைப்பிடப்பட்டது. இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் படத்தின் டிரெயிலர் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படத்தின் டிரெயிலரை திரைத்துறை பிரபலமான லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், சல்மான், எஸ்.ஆர் பிரபு அவர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளனர்.