X

அருள்நிதியும், உதயநிதியும் இணைந்து நடிக்கும் படத்தை பாலா இயக்குகிறார்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. இவர் கைவசம் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உதயநிதி அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும். உதயநிதியும், அருள்நிதியும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.