X

அருண் விஜயின் ‘தமிழ் ராக்கர்ஸ்’ டிரைலர் வெளியானது

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அண்மையில் வெளியான யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப்தொடர் தமிழ் ராக்கர்ஸ்.

இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை மனோஜ் குமார் கலைவாணன் எழுத ஏவிஎம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சைபர் கிரைமின் இருண்ட பக்கத்தையும், பொழுதுபோக்குத் துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்கிற உண்மையையும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த வெப்தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.