அருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அருண் ஜெட்லி இன்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த சில தினங்களாக தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து பாஜக தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.

உள்துறை மந்திரி அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் வந்திருந்தார். இன்று சர்தார் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமியில் நடந்த, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார்.

மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று முழுவதும் ஐதராபாத்தில் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அருண் ஜெட்லி மறைவு குறித்து கேள்விப்பட்டதும், தனது நிகழ்ச்சிகளை பாதியில் முடித்துக்கொண்ட அமித் ஷா, உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டார்.

அருண் ஜெட்லி பாஜக தலைவர் மட்டும் அல்ல, எனது குடும்ப உறுப்பினர் போன்றவர் என அமித் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools