அரியானா அரசு வேண்டுமென்றே டெல்லி பக்கம் தண்ணீரை திறந்து விட்டது – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. குறிப்பாக டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா மாநிலங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
யமுனை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. அரியானா மாநிலத்தில் யமுனை ஆற்றில் கட்டப்பட்டுள்ளது ஹத்னிகுண்ட். அதிக நீர்வரத்தால் ஹத்னிகுண்ட் தடுப்பணை திறந்து விடப்பட்டது.
டெல்லியில் மழை குறைந்த நிலையிலும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெல்லியில் பெரும்பாலான பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து உள்ளிட்ட பொதுசேவைகள் ஸ்தம்பித்தன.
முக்கியமான சாலைகளில் நீர் ஓடியதால் பெரும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது. நீர் வடிந்து சகஜ நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு இடையே டெல்லியின் முக்கிய பகுதிகள் உள்ள நீரை சுத்திகரித்து செய்து யமுனை ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால், யமுனை ஆற்றின் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
தற்போது அந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியானா அரசை பயன்படுத்தி பா.ஜதனா டெல்லியில ஒரு சில இடங்களை மூழ்கடிக்க வேண்டுமென்றே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு தவறானவை. ஒரு லட்சம் கனஅடிக்கும் அதகமாக நீர்வரத்து இருக்கும்போது, யமுனை ஆற்றின் மற்ற இடத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாது என அரியானா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் பொது தொடர்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மத்திய நீர் ஆணையம் வழிகாட்டு நெறிமுறையின்படி ஒரு லட்சத்திற்கும் அதிகமான கனஅடி நீர் வருகையின்போது மேற்கு யமுனை அல்லது கிழக்கு யமுனை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட முடியாது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அரியானா முதல்வரின் நீர்ப்பாசனத்திற்கான ஆலோசகர் தேவேந்திர சிங், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் ஒரு லட்சத்திற்கும் அதிக கனஅடி தண்ணீர் வரும்போது, பெரிய பாறைகள் காரணமாக மேற்கு யமுனை மற்றும் கிழக்கு யமுனை கால்வாயில் தண்ணீரை வெளியேற்ற முடியாது எனத் தெரிவித்தார். அது தடுப்பணையின் கட்டமைப்பை சேதப்படுத்தலாம்.
ஆகவே, கால்வாய்களுக்கான முதன்மை ரெகுலேட்டர் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. பக்கவாட்டு ரெகுலேட்டர் வாயில்கள் திறக்கப்பட்டு தண்ணீர் யமுனை ஆற்றில் விடப்பட்டன.” எனத் தெரிவித்துள்ளது.