அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பணமோசடி தொடர்பான வழக்கு தொடர்பான சோதனையா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனையா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், டெல்லி ஜல் போர்டு முன்னாள் உறுப்பினர் ஷலாப் குமார், மாநிலங்களை எம்.பி. அலுவலகம், தேசிய பொருளாளர் என்.டி. குப்தா ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
டெல்லி மாநில மந்திர அதிஷி, எஜென்சியின் அம்பலத்தை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.