Tamilவிளையாட்டு

அரசு மரியாதையுடன் வார்னே இறுதி சடங்கு நடைபெறும் – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் ஐசிசி முன்னாள் தலைவருமான சரத் பவார், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ஆதித்ய தாக்கரே, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், விராட் கோலி, மக்கள் நீதி
மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களுள் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.