X

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:

* அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 50 சதவீதம், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

* தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.