X

அரசு இடத்தில் வீடு கட்டிய பிரபாஸின் வீட்டுக்கு சீல் வைப்பு!

பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவருக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் ஒன்று தெலுங்கானா மாநிலம் ராயதுர்கா நகரில் அமைந்துள்ளது. 84 ஏக்கரில் அமைந்துள்ள இந்த வீடு அரசு நிலத்துக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் பிரபாசுக்கு எதிராக கடந்த திங்கள் அன்று தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து தெலுங்கானா அரசு அதிகாரிகள் பிரபாஸ் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். விரைவில் இடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பிரபாஸ் வீட்டிற்கு சீல் வைத்திருப்பது தெலுங்கு பட உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.