X

அரசியல்வாதி அவதாரம் எடுத்த நடிகை மாளவிகா நாயர்

இயக்குனர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘டெவில்’. இந்த படத்தில் நந்தமுரி கல்யாண் ராம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் மணிமேகலா எனும் கதாப்பாத்திரத்தில் மாளவிகா நாயர் நடிக்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்திற்கு சவுந்தர் ராஜன்.எஸ் ஒளிப்பதிவும், தம்மிராஜின் படத்தொகுப்பும் மேற்கொள்கின்றனர்.

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகும் ‘டெவில்’ திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக தோன்றும் இவரது கதாப்பாத்திர பின்னணியில் , அமைதியை வெளிப்படுத்தும் புறாக்கள் காணப்படுகின்றன. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Tags: tamil cinema