தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் சேதுபதி, நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை மிரட்டுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், டிவி, மிக்ஸியைப் பற்றி பேசுவது மட்டும் அரசியல் இல்லை. ஒரு சாதியைத் தூக்கிப்பேசுவது, இன்னொரு ஜாதியை இழிவுபடுத்துவது எல்லாமே அரசியல்தான்.
சினிமாக்கள் அரசியல் பேசணும். மக்களுக்கு விஷயங்கள் போய்ச் சேரணும். சென்சார் முடிஞ்சு வர்ற படங்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
”சினிமாக்காரங்களுக்குக் குளிர்விட்டுப் போயிடுச்சு” ன்னு சொல்றாங்க. உங்களை ஓட்டு போட்டு உட்கார வெச்சுருக்கோம். எங்களை மிரட்டுறது உங்கள் வேலையே கிடையாது. எங்களுடைய கருத்து தவறா இருந்தா அதை எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். ஆனா, மிரட்டுவது ரொம்பத் தவறு.” என்றும் கூறியிருக்கிறார்.