X

அரசியலில் எனது ஆதரவு என் தந்தைக்கு தான் – ஸ்ருதி ஹாசன்

மதுரை நகைக்கடை திறப்பு விழாவில் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி- நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

பதில்- அரசியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அரசியலில் ஆர்வமும் இல்லை. என்னுடைய ஆதரவு என் தந்தைக்கு தான்.

கேள்வி- கலைத்துறையில் உங்களுக்கு நிகராக யாரை கருதுகிறீர்கள்?

பதில்- நான் என்னுடன் யாரையும் ஒப்பிடுவது கிடையாது. எனக்கு நிகர் நான் தான். கலைத்துறையில் என் தந்தை போன்று சாதிக்க வேண்டும் என்று ஆசை.

கேள்வி- அரசியல் களத்தில் கமல்ஹாசன் சாதிப்பாரா?

பதில்- கமல்ஹாசன் சிறுவயதில் இருந்தே கடுமையான உழைப்பாளி. சிறு வயதில் இருந்தே அவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அரசியல் என்பது புதிதல்ல. அவர் அரசியல் களத்தில் சாதிப்பாரா இல்லையா என்பதை கூறுவதற்கு நான் ஜோசியர் கிடையாது. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கேள்வி- அரசியல் களத்தில் கமல்ஹாசன்-ரஜினிகாந்த் இணைவார்களா?

பதில்- கமல்ஹாசன்-ரஜினிகாந்த் இணைவது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற முடியாது. நான் கருத்து கூறினாலும் அது சரியாக இருக்காது.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.