X

அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை – அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பேச்சு

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கை எதுவும் நடைபெறாமல் இருக்க 20 துணை ராணுவ படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. எனவே போராட்டக்காரர்கள் அமைதி வழியில் திரும்ப வேண்டும்.

வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags: tamil news