X

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் – சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார். ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags: tamlil news