X

அயோத்தியில் ராமர் மோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்! – விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அயோத்தி வழக்கு, நீண்டுகொண்டே செல்லும் என்று கருதுகிறோம். இப்போதைக்கு தீர்வு ஏற்படாது. மத நம்பிக்கைகள், கோர்ட்டின் ஆய்வுக்கு உட்பட்டது அல்ல. ராமர் அயோத்தியில் பிறந்தாரா? இல்லையா? என்பதை கோர்ட்டு தீர்மானிக்க முடியாது.

எனவேதான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல்தான் ராமர் கோவில் கட்ட முட்டுக்கட்டையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.