Tamilசெய்திகள்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் கட்டுமான செலவு ரூ.1800 கோடி – அறக்கட்டளை குழு தகவல்

அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகளை ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம் பைசாபாத்தில் நடந்தது. இதில் ராமர் கோவிலுக்கான கட்டுமான செலவு ரூ.1,800 கோடி என மதிப்பிடப்பட்டது. நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையின் அடிப்படையில் இது இறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த அறக்கட்டளையின் விதிகள் மற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீண்ட ஆலோசனை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒப்புதலுக்கு பிறகு, அறக்கட்டளையின் விதிகள் மற்றும் துணைச் சட்டங்கள் இறுதி செய்யப்பட்டதாக பொதுச்செயலாளர் சம்பத்ராய் பின்னர் தெரிவித்தார்.

ராமர் கோவில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு (2023) டிசம்பருக்குள் முடிவடையும் என கூறிய அவர், 2024 ஜனவரி மகர சங்கராந்தி பண்டிகையின்போது கோவில் கருவறையில் ராமபிரான் வீற்றிருப்பார் என்றும் தெரிவித்தார்.