X

அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் – பிரதமர் மோடி பதிவு

பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி செல்கிறார். சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அயோத்தி சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார். அடுத்த மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

இன்று அயோத்தி செல்ல இருக்கும் நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள், தகவல் தொடர்பு வளர்ச்சி, கடவுள் ராமரின் நகரான அயோத்தியின் உயர்ந்த பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறேன். அதோடு பல திட்டங்களை திறந்து வைப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் கோடி ரூபாய் அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிகளுக்கான திட்டம். 4,600 கோடி ரூபாய் திட்டங்கள் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள திட்டங்கள் ஆகும்.

Tags: tamil news