X

அயோதி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பிஷேகம் நேற்று நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடரந்து அருள்பாலித்து வருகிறார். பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டார். நேற்று பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ராமரை இன்றும் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் சூரியன் உதயத்தில் பகவான் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். காலை 7 மணி முதல் 11.30 மணி வரைக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவாரக்ள்.

Tags: tamil news