Tamilவிளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி – ஆப்கானிஸ்தான் வெற்றி

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல், 2வது டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 பெல்பாஸ்டில் நடைபெற்றது.

டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சி தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கர்பாஸ் அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார். நஜிபுல்லா 42 ரன் எடுத்தார். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. டாக்ரெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பியான் ஹாண்ட் 36 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. டாக்ரெல் 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் அயர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.