அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக பும்ரா நியமனம்

இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports