வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்னில் அவுட்டானார். அவருக்கு கேப்டன் போர்ட்டர்பீல்டு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது.
வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டும், மொகமது சல்புதின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தமிம் இக்பால் 57 ரன்னும், லித்தான் தாஸ் 76 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.