அம்பானியின் மகன் திருமணத்திற்கு ரூ.4000 முதல் 5000 கோடி வரை செலவு!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடக்கம்.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.
ஆரமபம் முதலே ஆடம்பரமாக நடைபெறும் அமானி வீட்டுத் திருமணம் குறித்து இந்தியாவின் அதிகம் உள்ள நடுத்தர மற்றும் ஏழை வர்க்க மக்களின் இடையில் பேச்சு ஓடிகிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பதனால் அம்பானி கண்மண் தெரியாமல் காசை வாரி இரைத்து வருவதாக மக்கள் அங்கலாய்த்தனர்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவு எவ்வளவு என்ற தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின் திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவேசெலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.