சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்த சி.ஆர்.பி.எப். போலீசாரும் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் நடத்திய விசாரணையும் நிறைவு பெற்றது. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.