தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.