X

அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா வீடு கட்டி வருகிறார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamil news