அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் கடந்த விசாரணை முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதுவரை எட்டு முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது. கடந்த திங்கள் கிழமை வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கிறார்.