அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர்கள் அவரது உடல் நலனை கண்காணித்து வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools