கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா- சென்னை ரெயில் என்பதால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து ஒடிசா முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அப்போது தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வரிடம் உறுதி அளித்துள்ளார்.
கோரமண்டல் ரெயில் விபத்தில் 800க்கும் அதிகமானோர் சென்னை வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர் என தகவல் வெளியானது. ரெயில் விபத்து எதிரொலியாக 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்ச சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவை ஒடிசா விரைய வலியுறுத்தியுள்ளார். இந்தக் குழு நாளை விமானம் மூலம் ஒடிசா சென்றடைகிறது.