Tamilசெய்திகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பங்கேற்க தடை விதித்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஜாவேத் அகமதுகான் பங்கேற்கவில்லை. அவரை மம்தா புறக்கணித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள அமைச்சர் ஜாவேத் அகமது கானின் சொந்த தொகுதியான கஸ்பாவில் உள்கட்சி மோதல்கள் அண்மையில் பதிவாகியுள்ளன. அந்த பகுதி உள்ளூர் கவுன்சிலர் சுஷாந்த் கோஷின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி நிலையில், பல வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுஷாந்த் கோஷ் ஆதரவாளர்களுக்கு எதிராக அமைச்சர் ஜாவேத் அகமதுகான் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி, அமைச்சரை அழைத்து வாய் மூடி பேசாமல் இருங்கள் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.