Tamilசெய்திகள்

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.