X

அமெரிக்க தூதரை சந்தித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுகிற நிலையும் உருவானது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரை குறி வைத்து தலீபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்ததால், பேச்சு வார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முறித்துக்கொண்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை நேற்று முன்தினம் முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலான தலீபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இருப்பினும் இப்போதைக்கு அமெரிக்காவும், தலீபான்களும் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.