Tamilசெய்திகள்

அமெரிக்க டாலுக்கான இந்திய ரூபாயின் மதிப்பு சதம் அடிப்பதை பிரதமர் மோடி தவிர்க்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ம் தேதி 30 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது கடந்த 25 ஆம் தேதி 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. அதன்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக சரிந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும்.

கடந்த 4 நாட்களில் 193 காசுகள் சரிந்திருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 9 காசுகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.58 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரேனட் கூறுகையில், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை நெருங்கியுள்ளது. எனவே ரூபாய் மதிப்பு சதமடிப்பதை பிரதமர் மோடி தடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.