அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் – பிவி சிந்து தோல்வி, லக்சயா சென் வெற்றி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, அவரது எதிரியான சீனாவின் காவ் பாங் ஜீ-யை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 20-22 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் விரைவாக தோல்வியை ஒப்புக்கொண்டார். காவ் பாங் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிவி சிந்து உலகத் தரவரிசையில் 36-வது இடத்தில் இருக்கும் காவ் பாங்கை எதிரியாகவே நினைக்கிறார். ஏனென்றால், அவருடன் நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடந்த வரும் கனடாவில நடைபெற்ற கனடா ஓபனில் தோற்கடித்திருந்தார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், சங்கர் முத்துசாமியை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-17 லக்சயா சென் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

முத்துசாமி முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேறினார். 8-ம் தரநிலை பெற்றிருந்த வீரரையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports