அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஜோகோவிச் 4-வது ரவுண்டில் 23-வது வரிசையில் இருக்கும் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார். அவர் 3-வது சுற்றில் லொரன்சியை (இத்தாலி) 6-4, 7-6, (11-9), 7-6 (7-4) என்ற கணக்கில் வீழ்த்தினார்.
மற்ற ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான மெட்வதேவ், (ரஷியா), அலெக்ஸ் மினாவுர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வென்று 4-வது சுற்றில் நுழைந்தனர். 7-வது வரிசையில் உள்ள நிஷிகோரி (ஜப்பான்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 8-வது வரிசையில் உள்ளவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 3-வது சுற்றில் கரோலினா முச்கோவாவை (செக்குடியரசு) எதிர் கொண்டார்.
இதில் செரீனா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 4-வது சுற்றில் அவர் பெடரர் மேட்ரிக்கை (குரோஷியா) சந்திக்கிறார்.
மற்ற ஆட்டங்களில் 2-வது வரிசையில் உள்ள பேர்ட்டி (ஆஸ்திரேலியா), 3-வது இடத்தில் இருக்கும் பிளிகோவா (செக்குடியரசு), 5-ம் நிலை வீராங்கனை சுவிட்மோலினா (உக்ரைன்) மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) சோண்டா (இங்கிலாந்து), வாங் (சீனா) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.