ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.