அமெரிக்க ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் ஸ்வியாடெக் வெற்றி

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. கடின தரையில் நடக்கும் இந்த போட்டியையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலாந்து) 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ரெபக்கோ பீட்டர்சனை (சுவீடன்) 58 நிமிடங்களில் வீழ்த்தினார்.

தொடர்ந்து, ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர். அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 71வது இடம் வகிக்கும் ரெபேகா மசரோவாவிடம் வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் டொமினிக் திம் (ஆஸ்திரியா), 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports