கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.