Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னரை வீழ்த்தி அலெக்சாண்டர் காலியிறுதிக்கு முன்னேறினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர்.

இதில் ஸ்வெரெவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து நடந்த 3 செட்டை அலெக்சாண்டர் 6-2 என்ற கணக்கிலும் 4-வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினர்.

வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை அலெக்சாண்டர் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் 6-3, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.