Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஆன்டி முர்ரேவை வீழ்த்தி ஸ்டெபனோஸ் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே, கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதினார்.

முதல் செட்டை முர்ரே 6-2 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-6 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட முர்ரே மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் நான்காவது மற்று,ம் ஐந்தாவது செட்டை 6-3, 6-4 என வென்றார்.

இறுதியில், சிட்சிபாஸ் 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்தார். 4.30 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் வென்றதன் மூலம் சிட்சிபாஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.