X

அமெரிக்க ஓபன் டென்னிஸில் இருந்து ரபேல் நடால் விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும்  30-ம் தேதி தொடங்கி  செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்  இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் செஷனை  முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது என ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அண்மையில் அறிவித்து இருந்த நிலையில், தற்போது ரபேல் நடாலும் அறிவித்துள்ளார்.